சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்திற்கொள்ளாமல், நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.