மட்டக்களப்பு ரயில்வே கடவை காப்பாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 24 ரயில்வே கடவைகளில் கடமையாற்றும் ரயில்வே கடவை காப்பாளர்கள், தமது சேவையை நிரந்தரமாக்க கோரி இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனமின்றி 250 ரூபா நாள் சம்பளத்திற்கு பணி புரியும் தம்மை கடமையிலிருந்து நீக்கி, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமைக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளமைக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.