உக்கிரமடைந்துள்ள மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட இலங்கை வௌிவிவகார அமைச்சு இந்தியாவிடம் நேரம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். அதற்காக இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அதன் பின்னர் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் கூறினார்.

கடற்றொழில் அமைச்சு இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எனவும் தேவை ஏற்பட்டால் வௌிவிவகார அமைச்சும் அதில் பங்கேற்கும் எனவும் வௌிவிகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.