ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரி தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கட்சியின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ஸ தாக்கல் செய்த ஆட்சேபனை, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இன்று பகல் 1 மணிக்கு ஆராய்வதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மனுவின் பிரதிவாதியான நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நேற்று அடிப்படை ஆட்சேபனையை தாக்கல் செய்ததுடன், நீதிமன்றம் அந்த ஆட்சேபைனையை நிராகரித்தது.
கடுவளை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், மனுதாரர் இந்த நீதிமன்றத்தில் மீண்டும் தடையுத்தரவை கோர முடியாது என ரொமேஷ் டி சில்வா நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு இந்த நீதிமன்றத்திற்கு சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக நீதிபதி சந்துன் விதான இதன்போது கூறினார்.