ரஷ்யா யுக்ரைன் போரில் பங்கேற்பதற்காக இலங்கையர்களை ரஷ்யாவுக்கு அனுப்பிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அதன் முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடை – ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தை பகுதியிலுள்ள உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைதாகினர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.