ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) கீழ் இயங்கும் முல்லைத்தீவு பள்ளவெளி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி மகளிர் அமைப்புக்கும், வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த குயிலினி மகளிர் அமைப்புக்கும் தலா 25,000/- ரூபா வீதம் மொத்தம் 50,000/- ரூபா நிதி சுழற்சி முறை கடன் திட்ட மூலதன உதவியாக இன்று (15.05.2014) வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக முதலாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் பொருளாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான க.சிவநேசன்(பவன்), கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்டக்குழு இணைப்பாளருமான யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா மாஸ்டர், முன்பள்ளிகளின் தலைமை ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.