மாகாண மட்ட பாடசாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு 700 வெற்றிடங்கள் நிலவுவதாக மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. இதனால் குறித்த மொழிப் பாடங்களை கற்கும் மாணவர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் தம்மிகா விஜயசிங்க தெரிவித்தார். போதியளவு தகுதி வாய்ந்த பட்டதாரிகள் இன்மையினால் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் காணப்படுதாக அவர் கூறினார்.

இந்த வெற்றிடங்களை எவ்வாறு நிரப்புவது என்பது தொடர்பில் கல்வி அமைச்சிடம் மாகாண சபை தற்போது ஆலோசனைகளை கோரியுள்ளது.

கல்வி அமைச்சின் ஆலோசனைகள் கிடைத்தவுடன், ஆட்சேர்ப்பு இடம்பெறுமென தம்மிக்கா விஜயசிங்க தெரிவித்தார்.

மாகாணத்தில் நிலவிய ஏனைய ஆசியர் வெற்றிடங்களுக்கு 2800-க்கும் மேற்பட்டோர் அண்மையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.