முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து காயப்பட்ட மக்களை மருத்துவ உதவி நிறுவனங்களும் தொண்டர்களும் இராணுவத்தினரும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்து குவித்தவண்ணமும், அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிய வண்ணமும் இருந்தார்கள். இக்கால கட்டத்தில் புளொட் தோழர்கள் வைத்தியசாலையிலும் முகாங்களிலும் இருந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு வசதிகள் வேறு அத்தியாவசிய தேவை வசதிகள் என்பவற்றை செய்துகொண்டிருந்தார்கள்.
கழகத்தின் வெளிநாட்டுக் கிளைகளின் தோழர்களும், தனிநபர்களாக தோழர்களும் இதற்கு நிதியுதவிகளை வழங்கியிருந்ததோடு, புலம்பெயர் தோழர்கள் சிலர் நேரடியாகவும் வந்து இப்பணிகளில் தம்மையும்இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
வவுனியாவில் கொண்டுவந்து குவிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் தோழர்கள் மக்களிடமும் வியாபார நிறுவனங்களிடமும் பெற்ற உதவியைக் கொண்டும், கழகத்தின் வெளிநாட்டுக் கிளைகளின் தோழர்களும், தனிநபர்களாக தோழர்களும் வழங்கிய நிதியுதவிகளை கொண்டும் உணவு சமைத்து அம்மக்களின் பசியாற்றீனார்கள்.
