வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (25) பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்புக் கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்று முதல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.