இலட்சுமணன் நற்பணி மன்றத்தினரால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் வரவேற்புடன் ஆரம்பமாகிய இவ்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இவ் நிகழ்வில் இலட்சுமண்ன நற்பணி மன்ற உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்கம் சுப்பஸ்டார் விளையாட்டு கழகத்தினர்

சித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மகளீர் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பெருந்திரலான மக்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.