சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் சுகவீன விடுமுறை பெற்று கடமைகளுக்கு சமூகமளிக்காமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில அதிகாரிகள் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருந்ததாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் காமினி பீ.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று முதல் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளின் அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

தமது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு ​கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகளின் ஒன்றியம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதுடன், அமைச்சரவை பத்திரமொன்றும் சமர்ப்பிக்கபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.