கிளாலி வளர்மதி முன்பள்ளியைச் சேர்ந்த சிறார்களுக்கு சிற்றுண்டி, குளிர்பானம், தண்ணீர் போத்தல் மற்றும் மதிய உணவும் இன்று (22.05.2014) வழங்கிவைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மூன்றாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிளாலி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு. குகஈசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பிரதேச அமைப்பாளரும், கிளாலி சென்ற் மேரிஸ் சனசமூக நிலையத் தலைவருமான தோழர் சின்னவன் (சிவராசா), சென்ற் மேரிஸ் சனசமூக நிலைய செயலாளர் திரு. அன்டன், முன்பள்ளி ஆசிரியைகள் சோபனா, ரதா மற்றும் முன்பள்ளிச் சிறார்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.