யாழ். வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். யாழ். வைத்தியசாலையை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, யாழ். பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.