ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் கிளிநொச்சி மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் கிளிநொச்சி நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரும், பேச்சாளருமான க. சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் நா. இரட்ணலிங்கம், பொருளாளர் க. துளசி, துணைத் தேசிய அமைப்பாளர் கு. சுரேந்திரன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் மற்றும் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியிலும் இருந்து தலா மூன்று பிரதிநிதிகள் அடங்கலான மாவட்டக்குழு உருவாக்கப்பட்டதுடன் அதன் ஒருங்கிணைப்பாளராக ஐ. குகன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் மாவட்டத்தின் சமகாலப் பிரச்சினைகள் பற்றியும், எதிர்காலத்தில் கூட்டணி சார்பாக, மாவட்டக் குழுவுக்கு இருக்கக்கூடிய பணிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.