அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் சுவிஸ் உறுப்பினர் வி.இரத்தினகுமார் அவர்களின் நிதி உதவியில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பில் நான்காவது செயற்பாடாக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கு மரண வீடுகளுக்கு இலவசமாக வழங்குவதற்கான கூடாரம் அமைப்பதற்கான ஒரு தொகுதி நிதியுதவியாக 31,000/- ரூபாய் வழங்கப்பட்டது.
இன்று (26-05-2024) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணயின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், கட்சியின் மாவட்ட செயலாளர் கா.கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் இவ்உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வீச்சுகல்முனை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.சகாயசீலன், அன்னை மீனவர் அமைப்பின் தலைவர் த.மீனவன் ஆகியோரும் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
