யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து, அவசர பிரிவிற்குள் நேற்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு இருவர் நுழைந்துள்ளனர். விபத்தில் கையில் காயமேற்பட்ட ஒருவருடன் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை வைத்தியசாலைக்குள் செலுத்தியுள்ளார். இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர்  ​மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரைத் தாக்குவது CCTV-இல் பதிவாகியிருந்தது.

இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.