வவுனியா நாலாம்கட்டை விசேட தேவைக்குட்பட்டோருக்கான புனர்வாழ்வு அமைப்பான வரோட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் இரத்தினகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஐந்தாவது செயற்பாடாக இந்நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் தோழர் சிவா, தோழர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.