2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். க.பொ.த உயர் தர பரீட்சை கடந்த ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் 1,73,444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.