சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு ​கோரி அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சிடம் ​கோரிக்கை விடுத்தாலும் இதுவரையில் அதற்கான உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு தீர்வாக பல பரிந்துரைகள் கல்வி அமைச்சின் குழுவொன்றினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.