யாழ். ஏழாலையைச் சேர்ந்த திருமதி ரங்கநாதன் புனிதவதி அவர்கள் (14.06.2024) வெள்ளிக்கிழமையன்று காலமானார். இவர் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளரும், எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அலுவலக உதவியாளரும், முன்னாள் கிராம சேவையாளரும், சிறந்த சமூக சேவையாளரும், ஆன்மீக செயற்பாட்டாளருமான செல்லத்துரை ஞானசபேசன் அவர்களின் அன்புச் சகோதரியாவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு:
இறுதி நிகழ்வு நாளை திங்கட்கிழமை (17.06.2024) காலை 10.00 மணியளவில் இடம்பெறும்.
தொடர்புகட்கு
கெங்காதரன் – 0773263050