அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக அக்கரைப்பற்று, சாகாம வீதி, கோளாவில், அம்மன் சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்த 40 பேருக்கு இன்று (23.06.2024) விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் இரத்தினகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன்(சங்கரி), கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் தோழர் கெங்கா, அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களின் கட்சி இணைப்பாளர்களான ஓய்வுநிலை கல்வி அதிகாரி தோழர் குணாளன், தோழர் சரவணபவன், கட்சியின் மாவட்ட ஊடக இணைப்பாளர் தோழர் காந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
