முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனுவைப் பரிசீலிப்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. தரமற்ற தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.