மத்தளை விமான நிலையத்தை முகாமைச் செய்யும் பொறுப்பினை ரஷ்யா கையேற்கவிருப்பதாக விமானச் சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்இ இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகி இருப்பதாகவும் தெரிவித்தார். 209 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம்இ விமானப்போக்குவரத்து போதியளவில் இல்லாததன் காரணமாக, நட்டங்களை எதிர்நோக்கி இருந்தது.
இந்நிலையில் இந்திய மற்றும் ரஷ்யாவின் கூட்டு நிர்வாகத்திற்காக இந்த விமான நிலையம் கையளிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அந்த நாடுகளின் இரண்டு நிறுவனங்கள் மத்தளை விமான நிலையத்தைப் பொறுப்பேற்கவுள்ளன.