இலங்கை கடற்பரப்பில் அடுத்த ஆண்டில் இருந்து சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  ஜப்பான் ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்திற்கு பல்வேறு நாடுகளுடன் வேறுபட்ட சட்டங்கள் காணப்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனிடையே, சோனார் தொழிநுட்பத்துடனான கப்பலொன்றை இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில் வௌியுறவு அமைச்சர் ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.