புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் முன்னைநாள் பொறுப்பாளரும், லண்டன் நியூஹாம் பகுதியின் முன்னைநாள் கவுன்சிலரும் யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவருமான, தோழர் போல் சத்தியநேசன் அவர்கள் இன்று (05/07/2024) லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத் தருகின்றோம். யாழ். பரியோவான் கல்லூரியில் கல்விபயின்ற இவர், எண்பதுகளில், கழகத்தின் ஓர் அங்கமான தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் ( TRRO )த்துடன் இணைந்து புலம் பெயர்ந்து சென்ற ஆயிரக்கணக்கான எமது தேசத்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உன்னதமான தோழராவார்.
நியூஹாம் பகுதியில், முதல் முதலான தமிழ் கவுன்சிலராக நீண்டகாலம் சேவையாற்றியவர் என்கின்ற பெருமையும் இவரைச் சாரும்.
தோழர் போல் அவர்களின் திடீர் மறைவினால் துயருறிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( PLOTE )
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF )
05.07.2024