லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று (11.07.2024) மாலை வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 100 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.

மேற்படி நிகழ்வில் எமது கட்சியின் செயலாளர் பற்றிக், தேசிய அமைப்பாளர் பீற்றர், அமரர் தர்மலிங்கம் அவர்களின் புதல்வர் நாகராஜா, தோழர் ரூமி, தோழர் சாந்தன், சதா, சங்கர் , பாபு மாஸ்டர், நாகராஜா அவர்களின் குடும்பத்தினர்
மற்றும் ஊர்ப் பிரமுகர்களும், கலந்து கொண்டிருந்தார்கள்.