யாழ். கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு 12.07.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் சு.பிறேமன் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கு.பார்த்தீபன்(தென்னவன்) தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம், கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், வலிகிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.செல்வராசா,
லயன் றொனிகஜன்(சமாதான நீதவான்), கௌரவ விருந்தினர்களாக க.வசந்தராஜன்(பாலன்) தலைவர், கோப்பாய் வள்ளியம்மன் சனசமூக நிலையம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
 
 
 
 
 
 
 