முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் போது 50 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாளையும்(15) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவகத்தின் சிரேஷ்ட தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.