பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கத்தினால் கடந்த 75 நாட்களாக தொடர்ச்சியாக, பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.