22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்பின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் 83ஆம் உறுப்புரையின் (ஆ)பிரிவில் திருத்தங்களை ஏற்படுத்த அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த சட்டமூலம் வரையப்பட்டிருந்தது. இதனை வர்த்தமானியில் பிரசுரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கிய இருந்த போதும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் அவ்வாறு பிரசுரிக்காதிருக்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவுறுத்தியிருந்தார்.
எனினும் இன்று அந்த திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.