சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டபடி நாளை ஆரம்பிக்கப்படும் என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வேதன முரண்பாடு தொடர்பில் கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.