திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்று இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பாலையூற்ற, முருகன் கோவிலடி ‘சக்தி’ மாதர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கட்சியின் கனடா கிளைப் பொறுப்பாளர் தோழர் க.கந்தசாமி அவர்களின் நிதியுதவியில் சிங்கராசா தனூசியா என்ற குடும்பப் பெண்ணுக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சக்தி மாதர் சங்கத் தலைவி திருமதி வசந்தினி சந்திரன், தோழர்கள் பகீர், மோகன் ஆகியோரும், சக்தி மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
 
 
 