ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.