ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை மொட்டுச் சின்னத்தில் முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு முன்வைத்த யோசனைக்கு ஆதரவு கிடைக்கப்பெறவில்லை என பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.