வற்றாப்பளை உதயசூரியன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 29.07.2024 இடம்பெற்றது. இதன்போது சிறார்களுக்கான பரிசுப் பொருட்களும், விளையாட்டு நிகழ்வினை நடாத்துவதற்கான ஒலிபெருக்கி, பந்தல், கதிரை உள்ளிட்ட பொருட்களும் கட்சியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர்,
கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டார அமைப்பாளர் சஞ்சீ, கட்சியின் முள்ளியவளை வடக்கு அமைப்பாளர் ரூபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 