ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று வரையில் பதினான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடுவதற்கு எட்டு வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட ஒரு வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட ஐந்து வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 14ம் திகதி நண்பகல்வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் ஒசல் ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி லியனகேயும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாச ராஜபக்சவும், ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜசூரியவும், புதிய சிஹல உறுமய சார்பில் சரத் மனமேந்திரவும், ஜனசேன முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும்,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹூணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சாவும், சுயேட்சை வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, கே.கே பியதாஸ, ஆனந