அண்மையில் சர்ச்சைக்குள்ளான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று மன்னார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது அங்குள்ள வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளையடுத்து இன்று மதியம் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.