அம்பாறை – இங்கினியாகலவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். கராட்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியத்த பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீதே முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வீட்டுக்கு சென்று அங்கிருந்த தாய் மற்றும் மகள் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் 54, 33, 17 வயதுடையவர்களே கொல்லப்பட்டுள்ளனர். அதன்பின்னர் சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்திற்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தி ற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடமை நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.