ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை எதிர்வரும் 09 ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கையளிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் காலம் நேற்று(05) நள்ளிரவுடன் நிறைவடைவிருந்த போதிலும் அந்த காலஎல்லை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 50,000க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடமைகளுக்கு அவசியமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து மதிப்பிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.