வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு மற்றுமொரு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று காலை அவர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக குறித்த அமைச்சுப் பதவியை வகித்த விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதால் அந்த பதவியிலிருந்து விலகியிருந்தார்.

அவர் பதவி விலகியதையடுத்து நீதிஇ சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரமானது.

இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்றைய தினம் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.