கிராம உத்தியோகத்தர்கள் நேற்று ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தமது யோசனைகளை உள்ளடக்காமல் கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பினை வர்த்தமானியில் வௌியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஜகத் சந்த்ரலால் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது பணிப்பகிஷ்கரிப்பினால் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கிராம உத்தியோகத்தர்களினால் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கறுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஜகத் ச்சந்த்ரலால் மேலும் கூறியுள்ளார்.