இலங்கைக்காக பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் சைத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாலஸ்தீனத்தின் காஸாவில் இடம்பெறும் படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கவும் அனுர குமாரவினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இதன்போது அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி டகாபூம் கடோனா உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலரும் அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக இலங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கவும் தாம் தாயாராகவுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளனர்.