எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் மற்றுமொரு வேட்பாளர் தமது கட்டுப்பணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் செலுத்தியுள்ளார். இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் இராஜகிரிய பகுதியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.