அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் (USS Spruance) நாசகாரி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் தமது சம்பிரதாயங்களுக்கமைய இன்று முற்பகல் வரவேற்றனர். 160 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பல்இ 338 பணியாளர்களுடன் வருகை தந்துள்ளது. மீள் நிரப்புதல்கள் நோக்கத்துக்காக இலங்கை வந்துள்ள குறித்த அமெரிக்க நாசகாரி கப்பல் நாளைய தினம் மீண்டும் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.