கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கறுப்பு வாரம் இன்றுடன் நிறைவடைவதாக கிராம உத்தியோயகத்தர்கள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்குத் தேவையான வகையில் தமது சேவை திருத்தி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12ஆம் திகதி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமது பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.