உறுமய காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டத்தை இன்னும் இரண்டு வருடங்களில் நிறைவுறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இன்று இடம்பெற்ற முதலாவது இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசார நிகழ்வில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காணி வழங்கலுக்காகப் பிரத்தியேகமானதொரு அதிகார சபை உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது கட்சிகளின் அடிப்படையில் பிரிய வேண்டிய தருணம் அல்ல. நாட்டைக் காப்பதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே சுயேச்சை வேட்பாளராகத் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.