ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் முல்லைத்தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் சென்ற பா.அரியநேந்திரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், என் சிறீகாந்தா,

முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், துளசி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்த நிலாந்த, யதீந்திரா, வசந்தராசா உள்ளிட்டவர்களும்,

எமது கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.தவராஜா, கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், சிவலிங்கம் மாஸ்டர் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.