ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம் பேரணி துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 9,000ற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட காவல்துறை பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையில் 20ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குறித்த கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.