ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது. இதன்படி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்துக்கு பல அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து பெருந்தெருக்கள் துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சு,
சுற்றாடல், வனஜீவராசிகள் வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை ஆகிய அமைச்சுகளின் பொறுப்பு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் விஜித்த ஹேரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.