நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே உள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

அந்தவகையில், 11ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமைதி காலம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக் கூடாது. மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது.

வீடு வீடாகச் செல்ல முடியாது என அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அது சட்டவிரோத செயலாகும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.